Home உலகம் ஆயுத உற்பத்தியில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கா – ரஷ்யா

ஆயுத உற்பத்தியில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கா – ரஷ்யா

0

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக இலாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆயுத உற்பத்தி

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 2024 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வரலாற்றிலேயே அதிகபட்ச வருமானத்தைப் பதிவு செய்துள்ளன.

உலகின் முதல் 100 இராணுவ நிறுவனங்கள், மொத்தம் 679 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது இந்திய மதிப்பில் 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளன.

கிழக்காசிய நாடான உக்ரைன் – ரஷ்யா மற்றும் மேற்காசிய நாடான இஸ்ரேல் – காசா இடையே நீடிக்கும் போர்களால் ஆயுத தேவை பெருகியதே இந்த உயர்வுக்கு காரணம்.

இந்த வருவாய் முந்தைய ஆண்டை விட ஆறு சதவீதமும் 2015 ஆம் ஆண்டை விட 26 சதவீதமும் அதிகம்.

பல்வேறு நாடுகளின் ஆயுத தேவையைப் பயன்படுத்தி ஆயுத விற்பனை நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன, ஆயுதங்களின் தேவை ஆசியா – ஓசியானியா பகுதியை விட ஐரோப்பாவில் அதிகரித்து காணப்பட்டன.

ஐரோப்பிய நாடுகள் 

இதற்கு உக்ரைன் போர் காரணமாக கூறப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தலாக பார்ப்பதாலும் அவற்றின் ஆயுத தேவை அதிகரித்துள்ளது, ஆயுத உற்பத்தியின் மையமாக அமெரிக்கா தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இதன்படி, ஆயுத விற்பனையிலும் அந்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதுடன் ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதல் 100 இடங்களில் 39 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

இதன் வாயிலாக 29.72 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதுடன் இதேபோல் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் ஆயுத விற்பனையில் கடந்த ஆண்டு 23 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஆசிய – பசிபிக் பகுதியில் சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளால் அந்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆயுத கொள்முதல் வெகுவாக குறைந்தன.

இருப்பினும், ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சியை பெற்றுள்ளதுடன் மேற்காசியாவில் இஸ்ரேல் நிறுவனங்களின் கையே ஓங்கியுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version