Home உலகம் ஏ.ஆர் ரஹ்மான் உடல் நிலை குறித்து வெளியான புதிய தகவல்

ஏ.ஆர் ரஹ்மான் உடல் நிலை குறித்து வெளியான புதிய தகவல்

0
புதிய இணைப்பு

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், உடல் நலம் குறித்து மருத்துவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் (A.R.Rahman) நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் (Apollo Hospital, Chennai) இன்று (16.03.2025) அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெஞ்சுவலி 

58 வயதான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.  

மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து ரசிகர்கள் அவர் உடல் நிலை விரைவில் குணமாக இறைவனை வேண்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/YkSBW6ngzrA

NO COMMENTS

Exit mobile version