Home உலகம் கனடாவின் முக்கிய நகரிலிருந்து மக்கள் வெளியேற முயற்சி

கனடாவின் முக்கிய நகரிலிருந்து மக்கள் வெளியேற முயற்சி

0

கனடாவின் ரொறன்ரோ நகரில் அதிகரித்துச் செல்லும் வாடகையால் அந்த நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு

ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கை! மீண்டும் ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திய வடகொரியா

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு மனைகளின் விலை உயர்வு மற்றும் வாடகைத் தொகை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் ரொறன்ரோவில் குடியிருப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version