Home உலகம் கனடா – டொரண்டோ பகுதி வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

கனடா – டொரண்டோ பகுதி வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

0

கனடா (Canada) – டொரண்டோ பகுதியில் கடுமையான பனி மூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மூடு பனி காரணமாக வாகனங்களை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எச்சரிக்கையை கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) விடுத்துள்ளது.

பனி மூட்டமான வானிலை 

பாதைகளை தெளிவாக பார்க்க முடியாத காரணத்தினால் பயணங்கள் ஆபத்தாக இருக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனால், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை பனி மூட்டமான வானிலை தொடரும் எனவும், ஆனால் வெப்பநிலை 13°C ஆக குறையும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெயில் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 14°C – இது பருவமழை சராசரியை விட 2°C குறைவானதாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version