Home உலகம் அமெரிக்காவில் கோர விபத்து – ஒரு குழந்தை உட்பட பலர் பலி

அமெரிக்காவில் கோர விபத்து – ஒரு குழந்தை உட்பட பலர் பலி

0

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றையதினம்(23.08.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த பேருந்து அமெரிக்க – கனடா எல்லையில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோர விபத்து

குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

பேருந்தில் ஓட்டுநர் உட்பட 52 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு பட்டி அணியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்து ஏற்பட்ட பேருந்தில் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

ஏழு பேர் ஒரு அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு குறைந்தது 4 பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பஃபலோ நகரத்திலிருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெம்பிரோக் நகரத்திற்கு அருகில் I-90 இல் உள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

https://www.youtube.com/embed/R3ezfd2hbZ8

NO COMMENTS

Exit mobile version