Home உலகம் வெளிநாடொன்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள்

வெளிநாடொன்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள்

0

ஜம்மு – காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் நேற்று (21) அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள்

இந்தத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, சம்பவத்தில் 27 பேர் பரிதாபமாக பலியானதாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version