Home உலகம் சீனாவில் 6600 படிகளை ஏற சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்: வைரலாகும் காணொளி

சீனாவில் 6600 படிகளை ஏற சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்: வைரலாகும் காணொளி

0

சீனாவின் உள்ள தாய் மலையின் உச்சியை அடைவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ளது.

கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை 1,545 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலான ஈரான் அதிபரின் இலங்கை வருகை

சுற்றுலாப் பயணிகள்

இங்குள்ள கோயிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றார்கள்.

ஆனால் படியில் ஏறுவதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து சாதாரணமாக ஏற முடியாமலுள்ளது.

எனவே மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

வெளிநாடு அனுப்பவதாக கூறி மோசடி! சந்தேகநபர் கைது

அதிகமான பார்வைகள்

அதில் சில காணொளிகளில், படிகள் ஏற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகளும் உள்ளது.

சில பயணிகள் பாதி படி ஏறிய நிலையில், அவர்களின் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கிச் செல்லும் காட்சிகளும் எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன.

இந்த காணொளிகள் 80 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபுதாபி நகரில் இப்படியொரு சிறப்பா! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version