Home உலகம் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீத புதிய வரி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீத புதிய வரி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

0

அமெரிக்காவிற்கு (US)இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகள் குறித்த துறையின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் அறிவித்துள்ளது.

80 இலட்சம் கார் இறக்குமதி 

கடந்த ஆண்டு மாத்திரம் அமெரிக்கா சுமார் 80 இலட்சம் கார்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதனூடாக 240 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மெக்சிகோ (Mexico) உள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் கார்களை ஏற்றுமதி செய்கின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version