நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பரான ஜாரெட் ஐசக்மேனை அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “திறமையான வணிகத் தலைவர், கொடையாளர் மற்றும் விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனை நாசாவின் நிர்வாகியாக பரிந்துரைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விண்வெளி
விண்வெளி மீதான அவரது ஆர்வம் மற்றும் அனுபவம் எதிர்க்கால ஆய்விற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
நாசாவை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்ல அவர் பொருத்தமானவர் ஆக இருப்பார்.
ஜாரெட் ஐசக்மேன் , அவரது மனைவி மோனிகா மற்றும் அவர்களது குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
