Home உலகம் புதிய போப்பாண்டவராக அமெரிக்கர்: உடனடியாக ட்ரம்ப் பகிர்ந்த செய்தி!

புதிய போப்பாண்டவராக அமெரிக்கர்: உடனடியாக ட்ரம்ப் பகிர்ந்த செய்தி!

0

புதிய போப்பாண்டவாராக அமெரிக்கரான லியோ XIV என்றழைக்கப்படும் கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுத்த செய்தியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கொண்டாடியுள்ளார்.

அத்துடன், போப்பாண்டவாராக தெரிவு செய்யப்பட்ட ரொபர்ட் பிரீவோஸ்டுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தனதுஉத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் பதிவு

“அவர் முதல் அமெரிக்க போப் என்பதை உணர்ந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. என்ன ஒரு உற்சாகம், நம் நாட்டிற்கு என்ன ஒரு பெரிய மரியாதை.

போப் லியோ XIV ஐ சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இது மிகவும் அர்த்தமுள்ள தருணமாக இருக்கும்!” என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், முதல் அமெரிக்க போப்பாண்டவராக லியோ XIV தேர்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version