அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரியை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை(anura kumara dissanayake) ‘அருண’ குமார திசாநாயக்க என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 9 திகதியிட்டு வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ கடிதத்தலைப்பில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறான எழுத்துப்பிழை உள்ளது.
தவறை சுட்டிக்காட்டும் சமுக ஊடக பயனர்கள்
இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது, பல பயனர்கள் தவறை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
