Home உலகம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

0

அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், குறித்த நடவடிக்கை மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சலுகை

அத்தோடு, முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும் மற்றும் அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என குறிப்பிபட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version