உக்ரைன் (Ukraine) மீதான தாக்குதலை ரஷ்யா (Russia) நிறுத்தச் செய்வதற்கு சீனா (China) உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகின்றார்.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் மலேஷியாவில் (Malaysia) இடம்பெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க டொனால்ட் ட்ரம்ப் கோலாலம்பூர் செல்லவுள்ளார்.
இதன்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தை ஒன்றை அவர் நடத்தவுள்ளார்.
உக்ரைன் தாக்குதல்
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், “உக்ரைன் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
இந்த தாக்குதலை ரஷ்யா நிறுத்துவதற்கு தேவையான உதவிகளை சீனா செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன்.
ஷி ஜின்பிங் உடன் எனக்கு சிறந்த நட்பு உள்ளது, இந்த போர் நிறுத்தப்படுவதை பார்க்க அவரும் விரும்புகின்றார்” என அவர் தெரிவித்துள்ளார்.
