நோபல் விருது வென்ற மரியா கொரினா மச்சாடோ, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என தெரிவித்ததாக அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நோபல் பரிசு வென்றவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.
உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பரிசை நான் பெற்றுக் கொள்கிறேன்.
நோபல் விருது
உண்மையில் இந்த பரிசுக்கு நீங்கள்தான் உரித்தானவர் என தெரிவித்தார், இது மிகவும் சிறந்தது.
மச்சாடோவிடம் தான் கேட்டிருந்தால் தனக்கே விருதை வழங்கியிருப்பார்.
நான், அப்படியானால் எனக்குக் கொடுங்கள் என்று சொல்லவில்லை ஆனால் அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
