Home உலகம் ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி

ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி

0

அமெரிக்கா (USA) உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த அமைப்புகளை நேட்டோவிற்கு அனுப்பும் என்றும், பின்னர் அவற்றை உக்ரைனுக்கு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புடின் மீது கடும் அதிருப்தியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உதவும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்காப்பிற்காகக் கூடுதல் ஆயுதங்கள்

எனினும் எத்தனை பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot air defense missiles) வழங்குவது என அமெரிக்க ஜனாதிபதி அறிவிக்க வில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர் நிறுத்த கலந்துரையாடலை நடத்தும் ட்ரம்பின் முயற்சிகளை ரஷ்ய ஜனாதிபதி எதிர்த்ததால் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதாகவும், உக்ரைனின் தற்காப்பிற்காகக் கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் கடந்த (7) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version