அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் (Donald Trump) கொலை செய்ய முயன்ற நபரின் வீட்டை சோதனையிட்ட பின்னர் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் தாமஸ் வீட்டை சோதனையிட்டபோது, அவரது தொலைபேசியில் அவர் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து தேடியமை கண்டறியப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த ராஜ குடும்ப உறுப்பினர் பிரித்தானிய இளவரசியும், வருங்கால ராணியுமான கேட் மிடில்டன் (Kate Middleton) என தெரியவந்துள்ளது.
இளவரசியின் புகைப்படங்கள்
இதன் படி, ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபரின் தொலைபேசியில் இளவரசி கேட் மிடில்டனின் புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், ட்ரம்ப் கொலை முயற்சியின் பின்னரான அடுத்த நாள், இந்த விடயம் குறித்து எந்த தகவலுமே அறியாமல் இளவரசி கேட் விம்பிள்டன் இறுதிப் போட்டியைக் காண சென்றுள்ளார்.