Home உலகம் நோபல் பரிசை ட்ரம்ப் மறந்துவிட வேண்டியதுதான் : ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்

நோபல் பரிசை ட்ரம்ப் மறந்துவிட வேண்டியதுதான் : ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்

0

 அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் மறந்து விட வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ள ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ், உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

டொனால்ட் ட்ரம்பின் செயலால், இஸ்ரேல் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. அந்நாட்டில் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும், அமெரிக்க தாக்குதலில் ஈரான் அரசு தப்பிவிட்டது. எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்துள்ளது.  

 ஈரான் ஆன்மிக தலைவரை வெறுத்தவர்களும் ஆதரிக்கும் நிலை

அந்நாட்டின் மத தலைவரிடம் இருந்து, இதற்குமுன் வேறுபட்டோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ இருந்தவர்கள்கூட தற்போது, ஆன்மீக தலைமையை தேடி ஓடும் நிலை காணப்படுகிறது. அமெரிக்காவை ட்ரம்ப், மற்றொரு போரில் தள்ளியுள்ளார்.

 இஸ்ரேல் – அமெரிக்காவின் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் உள்ள பெருமளவிலான நாடுகள் எதிர்க்கின்றன.

நோபல் பரிசை மறந்து விட வேண்டியதுதான்

 எனவே அமைதிக்கான நோபல் பரிசையும் ட்ரம்ப் மறந்து விட வேண்டியதுதான் என்று கூறி உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் என்ன செய்தாலும்தனக்கு நோபல் பரிசு(nobel prize) கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) கவலையுடன் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்jிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version