அமெரிக்காவில் (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) தங்க நிறத்தில் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்திற்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் கையில், பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்று இந்த சிலை வடிமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விவாதம்
அத்துடன் 12 அடி உயர தங்க நிறத்தினால் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
ட்ரம்ப் ஆதரவு
அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளதுடன் இச்சிலைக்கு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதி சந்தைகளில் அரசின் பங்களிப்பு குறித்த விவாதத்தை தூண்டும் நோக்கத்துடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
