பிபிசி நிறுவனம் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறித்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி அவர் உரையாற்றிய உரை ஒன்றை திரித்து தவறாக வெளியிட்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து, பி.பி.சி செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவி விலகினர்.
நஷ்ட ஈடு
இருப்பினும், ட்ரம்ப் பத்து பில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு பிபிசி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
செப்டம்பரில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையானது ஜனநாயகக் கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி அதன் மீது 15 பில்லியன் டொலர் கேட்டு ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
