Home உலகம் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுகளும் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுகளும் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி

0

கனடாவுடனான (Canada) அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் நிறுத்துவதாக அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”கனடா, வியாபாரம் செய்ய மிகவும் கடினமான ஒரு நாடாக இருப்பதைத் தவிர, எங்கள் விவசாயிகளிடம் பல ஆண்டுகளாக பால் பொருட்கள் மீது 400 வீத வரி விதித்து வந்துள்ளது.

டிஜிட்டல் சேவைகள்

இப்போது அவர்கள் எங்கள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது எங்கள் நாட்டின் மீது நேரடியானதும் மற்றும் வெளிப்படையானதுமான தாக்குதலாகும்.

தெளிவாக, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை போல செயல்படுகிறார்கள்; அந்த அமைப்பும் இதுபோலவே செய்துள்ளது.

அமெரிக்காவுடன் வியாபாரம் 

அத்தோடு, அதையொரு விவாதமாக நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

இந்த மிகைப்படுத்தப்பட்ட வரியை அடிப்படையாகக் கொண்டு, கனடாவுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்துகிறோம்.

வருகிற ஏழு நாட்களுக்குள் கனடா, அமெரிக்காவுடன் வியாபாரம் செய்ய வேண்டுமானால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதனை அறிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version