Home உலகம் பூமியே அதிரும் வகையிலான அறிவிப்பை வெளியிடப்போகும் ட்ரம்ப் : பரபரப்பில் உலகம்

பூமியே அதிரும் வகையிலான அறிவிப்பை வெளியிடப்போகும் ட்ரம்ப் : பரபரப்பில் உலகம்

0

பூமியை(earth) அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா(canada) நாட்டின் பிரதமர் மார்க் கார்னி(mark carney) சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பூமியை அதிர வைக்கும் அறிவிப்பு

அப்போது, டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார், அடுத்த ஒரு சில நாள்களில் “பூமியை அதிர வைக்கும்” ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாகக் கூறினார்.

அது வணிகம் தொடர்பான அறிவிப்பு அல்ல என்று மட்டும் தெளிவுபடுத்திய ட்ரம்ப், அதைத் தவிர்த்து வேறு ஒரு விஷயம் இது. ஆனால் நிச்சயம் அது பூமியை அதிர வைக்கும் அறிவிப்பாக இருக்கும், நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக அறிமுகப்படவிருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பு

ட்ரம்பின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி என்ன சொல்வதற்கு திட்டமிடுகிறார் என்று பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தில் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களே, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

 

NO COMMENTS

Exit mobile version