Home உலகம் அவசர அவரசமாக புறப்படும் ட்ரம்ப்: உச்சகட்டத்திற்கு செல்லும் இஸ்ரேல்-ஈரான் போர்!

அவசர அவரசமாக புறப்படும் ட்ரம்ப்: உச்சகட்டத்திற்கு செல்லும் இஸ்ரேல்-ஈரான் போர்!

0

புதிய இணைப்பு

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு  G7 உச்சிமாநாட்டிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே புறப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தெஹ்ரானில் வசிப்பவர்களை வெளியேறுமாறு அவர் எச்சரித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் காரணமாக, ஜனாதிபதி ட்ரம்ப் இன்று இரவு நாட்டுத் தலைவர்களுடன் இரவு உணவிற்குப் பிறகு புறப்படுவார்” என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடன் வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தனது, ட்ருத் சோஷியல் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில், ஈரான் அணுகுண்டு வைத்திருக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்திய அவர், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதது ஈரானின் பெரிய தவறு என தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெஹ்ரானில் நிலவும் அபாய சூழலை கருத்தில் கொண்டு அங்கிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version