Home உலகம் அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம் – தனி விமானத்தில் பறந்த விஜய்

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம் – தனி விமானத்தில் பறந்த விஜய்

0

தமிழக அரசியல் களத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ள த.வெ.க. தலைவர் விஜய் (tvk leader vijay) திருச்சியிலிருந்து தனது பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். 

மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று (13.09.2025) தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பிரச்சாரத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அந்தவகையில், முற்பகல் 10.35க்கு திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில், த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் த.வெ.க. தலைவர் விஜய் டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version