Home உலகம் ட்விட்டர் பறவை ஏலத்தில் விற்பனை : விலை எவ்வளவு தெரியுமா?

ட்விட்டர் பறவை ஏலத்தில் விற்பனை : விலை எவ்வளவு தெரியுமா?

0

பிரபலமான ட்விட்டரின் (Twitter) பறவை சின்னம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் என்று பெயரிடப்பட்ட சமூக வலைதளத்தை எக்ஸ் தளமாக எலான் மஸ்க் (Elon Musk) மறுபெயரிட்டார்.பின்னர், சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் இருந்து பிரபலமான பறவை சின்னம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 21-ம் திகதி பிரபலமான இந்த பறவை சின்னம் ஏலத்தில் $34,375 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நீலநிற பறவை சின்னம்

பல்வேறு பொருட்களை வணிகம் செய்யும் RR ஏல நிறுவனமானது ட்விட்டர் சின்னத்தை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது.

இந்த நீலநிற பறவை சின்னத்தின் எடை 560 பவுண்டு ஆகும். அதாவது 254 கிலோ ஆகும். இதன் அளவு 12 அடி X 9 அடி ஆகும். ஆனால், இதனை வாங்கியவரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை.

இதற்கு முன்னதாக ட்விட்டரின் அடையாளங்கள், சமையல் உபகரணங்கள், நினைவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை எலான் மஸ்க் ஏலத்தில் விற்றுள்ளார்.

மேலும், இந்த ஏலத்தில் சில தொழில்நுட்ப பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. அதாவது ஆப்பிள் 1 கணினி மற்றும் அதன் பாகங்கள், முதல் தலைமுறை 4 GB ஐபோன் ஆகியவை ஏலம் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version