Home முக்கியச் செய்திகள் கொழும்பில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவன், மாணவி தொடர்பில் வெளியான புதிய தகவல்

கொழும்பில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவன், மாணவி தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

புதிய இணைப்பு

கொழும்பில் நேற்று (2) உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன் படி, விசாரணையில் 15 வயதான குறித்த இருவரும் காதல் தொடர்பில் இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) விழுந்து 15 வயதுடையவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாடசாலை முடிந்ததும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு உடைகளை மாற்றிக்கொண்டு, காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, பாடசாலை பைகளை உடற்பயிற்சி மையத்திற்குள் வைத்துவிட்டு, உடற்கட்டமைப்பு மையத்துக்கு வெளியே உள்ள படிக்கட்டுகள் வழியாக 67வது மாடிக்கு சென்றனர்.

குறித்த இருவரும் திட்டமிட்டு உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பிலுள்ள (colombo) பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த சம்பவம் கொழும்பு – கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கொழும்பு – குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு – கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாணவர்கள் தங்கியிருந்த இல்லத்திலும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://ibctamil.com/article/two-school-students-death-in-colombo-1719969349?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version