Home உலகம் கனடாவில் இடம்பெற்ற கொலை: இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

கனடாவில் இடம்பெற்ற கொலை: இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

0

கனடாவின்(canada) பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பாலமுரளி மற்றும் டொரண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பாலசேகர் (வயது 24) ஆகியோர், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிக்கிடையே ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

 கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது

முதலில், அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி ஒரு கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டனர்.

அப்போது, டொரண்டோ காவல்துறையினர், பிக்ரிங் நகரில் ஏன் விசாரணை நடத்தினார்கள் என்பதைக் குறித்துப் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை.

வாரம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகியபோது, அவர்கள்மீது மேலும் மூன்று கொலை சதி குற்றச்சாட்டுகள் மற்றும் இரண்டு சொத்துத் திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கு : பேக்கரி மற்றும்  இரண்டு உணவகங்களோடு தொடர்புடையது

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், இந்த வழக்கு ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பிக்ரிகில் உள்ள இரண்டு உணவகங்களோடு தொடர்புடையது என குறிப்பிடுகின்றன.

 கோகிலன் பாலமுரளி மற்றும் பிரன்னன் பாலசேகர் இருவுரும் ஏப்ரல் 11 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version