Home உலகம் வெளிநாடொன்றில் நூற்றாண்டின் கோர தாண்டவம்…! யாகி புயலில் சிக்கி 141 பேர் பலி

வெளிநாடொன்றில் நூற்றாண்டின் கோர தாண்டவம்…! யாகி புயலில் சிக்கி 141 பேர் பலி

0

இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் யாகி, வியட்நாம் (Vietnam) நாட்டை முழுவதுமாக உலுக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த யாகி (Typhoon Yagi) புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்துள்ளதுடன் 69 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது.

வெள்ளப்பெருக்கு

மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. 

புயல் வீசி ஓய்ந்த பிறகு இடி மின்னலுடன் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கும் மற்றும் மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அங்கே ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு துண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் புயலால் 141 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version