Home உலகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த தரப்பினர் நாளை (01) முதல் வெளியேறமுடியும் என அந்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது, ​​தொழில் வழங்குநரின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியில் இருப்பவர்களுக்கும், காவல்துறை முறைப்பாடுகளுக்கு உள்ளானவர்களுக்கும் அபராதம் அல்லது சட்டக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்காலிக விசா

மேலும் “கடவுச்சீட்டை இழந்த விண்ணப்பதாரர்கள் ஐசிபி ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் பயண ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்றும் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களளுக்கு தற்காலிக விசா பெற்று புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு, தூதரகத்தால் வழங்கப்பட்ட உங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது அவசரகால வெளியேற்ற அட்டையுடன் குடிவரவு சேவை மையங்களுக்கு வர வேண்டும்.

பொது மன்னிப்பில் வெளியேறுபவர்கள் அனுமதிப் பத்திரத்தைப் பெற்று 14 நாட்களுக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தினை விட்டு வெளியேற வேண்டும்” என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.

NO COMMENTS

Exit mobile version