Home உலகம் இஸ்ரேல் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வந்தால் கைது செய்வோம்: பிரித்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேல் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வந்தால் கைது செய்வோம்: பிரித்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

0

இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu), பிரித்தானியாவுக்கு (England) வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தின்  (Palestine) காசா (Gaza) முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) கருத்து தெரிவிக்கும் போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து காவல்துறையினர் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.

சர்வதேச  சட்டம்

ஆனால் உள்நாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு பிரித்தானியா எப்போதும் இணங்கும்.

நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நெதன்யாகு பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று பிரித்தானியா மறைமுகமாக தெரிவித்துள்ளது.

அதேபோல் கனடா (Canada), அயர்லாந்து, இத்தாலி (Italy), நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன் (Sweden), பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இணங்கப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

NO COMMENTS

Exit mobile version