Home உலகம் பிரித்தானியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி!

பிரித்தானியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி!

0

பிரித்தானியாவில் (Britain) உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு (Rwanda) அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்  

ஐரோப்பாவிலிருந்து (Europe) பிரித்தானியாவுக்குள் சிறிய படகுகள் மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தப் போவதாக பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) அண்மையில் தெரிவித்தமைக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, புகலிடக் கோரிக்கையாளர்களுடனான முதலாவது விமானம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரம் ருவாண்டாவுக்கு செல்லக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு கடத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லாதவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் அந்த நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிலெவெர்லி (James Cleverly) தெரிவித்துள்ளார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் ஆரம்பம்!

மேலும் தெரிவித்த அவர், “சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை விரைவாக கைது செய்தால் எங்கள் விமானங்களை ருவாண்டாவிற்கு அனுப்பலாம்.

ருவாண்டா பாதுகாப்பான மூன்றாவது நாடு என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதை தொடர்ந்தே சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன” என தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சுட்டுக்கொலை: வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version