Home உலகம் பிரிட்டன் செல்லும் ஐரோப்பிய பயணிகளுக்கு இ-கார்ட் : வெளியான தகவல்

பிரிட்டன் செல்லும் ஐரோப்பிய பயணிகளுக்கு இ-கார்ட் : வெளியான தகவல்

0

பிரிட்டனுக்கு செல்லும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மின்னணு பயண ஆவணத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 16 பவுண்டுகள் செலவழித்து இ-கார்ட் அனுமதிகளைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-கார்ட் நிகழ்நிலையில், பெறலாம் என்றும் இது ஏப்ரல் ஒன்பதாம் திகதழ முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலுவான உறுப்பினர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான உறுப்பினராக இருந்த பிரிட்டன், பிரெக்ஸிட் செயல்முறைக்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, அன்றிலிருந்து ஐரோப்பாவிலிருந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பிரிட்டன் இப்போது தனது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து ஐரோப்பியர்களையும் இலக்காகக் கொண்டு மின்னணு பயண அனுமதிகளை வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது புதிய முறையின் கீழ், பிரிட்டிஷ் எல்லையைக் கடக்கும் அனைவரும் இந்த மின்னணு பயண அனுமதிகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version