Home உலகம் பிரித்தானியாவின் முதல் பெண்மணியாகவுள்ள விக்டோரியா ஸ்டார்மர்

பிரித்தானியாவின் முதல் பெண்மணியாகவுள்ள விக்டோரியா ஸ்டார்மர்

0

பிரித்தானிய (UK) தேர்தல் முடிவுகளுக்கமைய தொழிற்கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் (keir starmer) பிரமராக பதவியேற்றதை தொடர்ந்து  விக்டோரியா ஸ்டார்மர் (victoria starmer) முதல் பெண்மணியாகத் தயாராக உள்ளார்.

பிரித்தானியாவில் நேற்றையதினம் (5) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் நாட்டின் 58வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அதிகார மாற்றம்

பொதுவாக, முதல் பெண்மணியாக ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமரின் மனைவியாக இருப்பவரே கருதப்படுகிறார், இதற்கமையவே விக்டோரியா ஸ்டார்மர் முதல் பெண்மணியாகவுள்ளார்.

ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தை தொடர்ந்து, கெய்ர் ஸ்டோர்மர் தனது அமைச்சரவையை அமைத்துள்ளார். ரேச்சல் ரீவ்ஸை நிதி அமைச்சராக்கியுள்ளார், இவர்தான் இந்தப் பதவியை எட்டிய முதல் பெண்.

துணைப் பிரதமராக ஏஞ்சலா ரெய்னர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவை தவிர, வெளியுறவு அமைச்சராக டேவிட் லாம்மி
உள்துறை அமைச்சராக யவெட் கூப்பர், பாதுகாப்பு அமைச்சராக ஜான் ஹேலி, கல்வி அமைச்சராக பிரிட்ஜெட் பிலிப்சன், எரிசக்தி அமைச்சராக எட் மிலிபாண்ட், வர்த்தக அமைச்சராக ஜொனாதன் ரெனால்ட்ஸ், போக்குவரத்து அமைச்சராக லூயிஸ் ஹை, நீதி அமைச்சராக ஷபானா மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version