பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோரே போட்டியிடுபவர்களாவர்.
15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்தது.
இந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.