இஸ்ரேல் (Israel) மீது ஈரான் (Iran) நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பிரித்தானியா (UK) ஈரானிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் இதனை நேற்று (14) தெரிவித்துள்ளது.
பொருளாதாரத் தடைகள் ஈரானின் இராணுவம், விமானப்படை மற்றும் ஈரானின் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணை வளர்ச்சியுடன் தொடர்புடைய அமைப்புகளில் ஈடுபட்ட அமைப்புகள் மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா
மீண்டும் எச்சரிக்கப்பட்ட போதிலும், ஈரானால் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மேலும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.
ஈரானால் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மேலும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேல் மீதான அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, நாங்கள் ஈரானைக் கணக்குப் போட்டு, இந்தச் செயல்களுக்கு உதவியவர்களை அம்பலப்படுத்துகிறோம்.” என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார தடை
இதேவேளை, ஈரானைச் சேர்ந்த 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா (United States) பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த நடவடிக்கையானது இஸ்ரேலுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.