Home உலகம் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள் – பிரித்தானியாவில் வெடித்த போராட்டம்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள் – பிரித்தானியாவில் வெடித்த போராட்டம்

0

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும்,
சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் இணைந்து ஐக்கிய ராச்சியத்தில் (UK) உள்ள இலங்கை
உயர்தானியத்துக்கு முன்னால் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப்
புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே
காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ,
இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப்
புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை
வெளிப்படுத்தப்படவில்லை.

பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள்

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி
விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும்.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்திற்கான
பயணத்தை மேற்கொண்ட நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப்
போராட்டம் அமைந்தது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு
இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக
இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொண்டனர்.


you may like this


https://www.youtube.com/embed/7iUUNM9FB6g

NO COMMENTS

Exit mobile version