Home உலகம் போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்ட உக்ரைன் ரஷ்யா

போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்ட உக்ரைன் ரஷ்யா

0

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சமீபத்தில் நடந்த பரிமாற்றத்தில் தலா 90 போர்க் கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) இடைத்தரகராக செயல்பட்டதன் காரணமாக இவ்வாறாக கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று, சுமார் 90 ரஷ்ய பிரஜைகள் சிறையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு

மேலும் தெரிவித்த அவர், “ரஷ்ய சிறையில் உள்ள எங்கள் மக்கள் அனைவரையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம். அனைவரையும் விடுவிப்பதற்கான எங்கள் பணியை தொடர்ந்து முன்னெடுக்கிறோம்.

எதிரிகளால் பிடிக்கப்பட்ட அனைவரையும் பற்றிய உண்மையை நாங்கள் தேடுகிறோம். அத்துடன், போர் கைதிகளை பரிமாற்ற உதவிய குழுவினருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

மேலும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக மாஸ்கோவிற்கு (Moscow) விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளதுடன், பதிலுக்கு 90 உக்ரேனிய வீரர்கள் விடுவிக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

போரிடும் இரு தரப்பினருக்கும் இடையிலான கடைசி பரிமாற்றம் கடந்த மே மாத இறுதியில் நடைபெற்றதோடு, தலா 75 கைதிகள் இதன் போது பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version