Home உலகம் அதிரும் உக்ரைன் : இரவிரவாக பாரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா

அதிரும் உக்ரைன் : இரவிரவாக பாரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா

0

உக்ரைனின்(ukraine) பல பகுதிகள் மீது இரவிரவாக ரஷ்யா(russia) பாரியளவில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பல பகுதிகளில் தாக்குதல்

அதேபோல் உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை ட்ரோன்கள் சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள்

மேலும் இரவு நேரங்களில் ரஷ்யா ஏவிய 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது, இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள்.இவற்றில் பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

NO COMMENTS

Exit mobile version