ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதிக்குள் ஊடுருவிய போது உக்ரைனியப்(ukraine) படைகள் இன்று(14) 100 ரஷ்ய இராணுவ வீரர்களை சிறைபிடித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர் உயர்மட்ட இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் காணொளி மூலம் பேசும்போதே தளபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட பதிவு
“சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என எக்ஸ் தளத்தில் ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார். “இது எங்கள் தோழர்கள் மற்றும் பெண்கள் வீட்டிற்கு திரும்புவதை துரிதப்படுத்தும்.” என அவர் குறிப்பிட்டார்.
Morning report by Commander-in-Chief Oleksandr Syrskyi on the situation across all major directions, particularly in the Toretsk and Pokrovsk areas, as well as the operation in the Kursk region.
We are not forgetting our eastern front for a second. I have instructed the… pic.twitter.com/5RE6EgLFn8
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 14, 2024
இதேவேளை ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய படைகள் முன்னேற்றம்
இன்று பல்வேறு திசைகளில் ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் வரை உக்ரைனிய படைகள் முன்னேறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் எவ்வளவு ரஷ்ய நிலப் பகுதி கைப்பற்றப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை.