Home உலகம் உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கி வெளியிட்ட தகவல்

உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கி வெளியிட்ட தகவல்

0

உக்ரைன் தனது சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  தெரிவித்துள்ளார். 

நமக்கு ஒரு நீதியான அமைதி தேவை, நமது எதிர்காலத்தை நாம் மட்டுமே தீர்மானிக்கும் ஒரு அமைதி என்று அவர் கூறியுள்ளார். 

நீதியான அமைதி 

மேலும், உக்ரைன் ஒரு பாதிக்கப்பட்ட நாடு அல்ல, அது ஒரு போராளி நாடு என்றும் அவர் பெருமிதம் கொண்டுள்ளார். 

உக்ரைன் இன்னும் வெற்றி பெறவில்லை, ஆனால் அது நிச்சயமாக தோற்காது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

உக்ரைன் ரஷ்ய மின்சாரம் மற்றும் எரிசக்தி வசதிகளை இரவோடு இரவாகத் தாக்கியதாகவும், அதன் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ட்ரோன் தாக்குதல்கள் தான் காரணம் என்றும் மாஸ்கோ கூறியதைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

NO COMMENTS

Exit mobile version