ரஷ்ய(Russia) உக்ரைன்(Ukraine) போர் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து,
குர்ஸ்க்(Kursk) நகரில் உள்ள இரண்டாவது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது ரஷ்யாவிற்குள் புகுந்து உக்ரைனிய படைகள் குர்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனிய படைகள் அமெரிக்கா அளித்துள்ள HIMARS ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்ய பிராந்தியத்தின் முக்கியமான பாலங்களில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி இதனை உடைத்தது.
ரஷ்ய உக்ரைன் போர்
இந்த பாலம் உக்ரைன் வடக்கு எல்லைப் பகுதியில் 6.8 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள 2வது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதாவது, உக்ரைனிய விமானப்படை தளபதி டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் Zvannoe பகுதியில் Seym ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய பிராந்தியத்திற்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவது ஏற்கனவே சர்வதேச நாடுகள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.