Home உலகம் உக்ரைன் – ரஷ்யாவில் ஆரம்பமான ட்ரம்ப் போர்

உக்ரைன் – ரஷ்யாவில் ஆரம்பமான ட்ரம்ப் போர்

0

உக்ரைனுக்கு எதிரான ரஸ்யாவின் போர் பல கட்டங்களை தாண்டியுள்ள நிலையில் தற்போது அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்  பொறுப்பாக மாறி வருகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த போரை துவக்கியவர். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் அதை நிறுத்த இயலவில்லை.

ஆனால் அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு போரை நிறுத்தும் கடப்பாட்டில் உள்ளது.

ஆதரவாளராக இருந்த அமெரிக்கா

உக்ரைனுக்கு முக்கிய ஆதரவாளராக இருந்த அமெரிக்கா, பைடன் காலத்தில் முழு ஆதரவு வழங்கியிருந்தது.

அதனால், ட்ரம்ப் பதவி ஏற்றதும், அவர் இந்த பிரச்சினையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது  இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களில், ட்ரம்ப் எடுத்த முடிவுகளே அவரை நேரடியாக போருக்குள் இழுத்துள்ளன.

புடின் அமைதிக்கு ஆர்வமில்லையென ட்ரம்ப் உணர்ந்ததாக சில அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன்படி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவை என்பதை புரிந்துகொண்டதாகவும், ஆனால் உதவியை அவர் சிறப்பாக முன்னெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அணு ஆயுத மிரட்டல்

அதற்கமைய முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வடெவ் கூறிய அணு ஆயுத மிரட்டலுக்கு, ட்ரம்ப் கணிசமாக பதிலளித்து, அமெரிக்க அணுசக்தி கப்பல்களை ரஷ்யாவின் அருகே கொண்டு செல்லத் திட்டமிட்டார்.

இதனால், சில வாரங்களில், உக்ரைனுக்கு உதவிகளை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக அணுஆயுத மிரட்டலுக்கு செல்லும் நிலைக்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version