Home உலகம் ரஷ்யாவின் உலங்குவானுர்தியை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் ட்ரோன் படகு!

ரஷ்யாவின் உலங்குவானுர்தியை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் ட்ரோன் படகு!

0

உக்ரைனின் (Ukraine) ட்ரோன் படகு நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய (Russia) உலங்குவானுர்தி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் இராணுவ உளவுத்துறை ஒரு ஏவுகணை ஏந்திய ட்ரோன் படகு மூலம் ரஷ்யவின் Mi-8 உலங்குவானுர்தியையே வெற்றிகரமாக வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

இது உக்ரைனின் கடல் போர் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அடையாளம் காட்டப்படுகிறது.

நில-வான் ஏவுகணை

“குரூப் 13” சிறப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஏவுகணை ஆயுதங்களுடன் பொருத்தப்பட்ட மாகுரா V5 கடல் ட்ரோன்(Magura V5) பயன்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனிய ட்ரோன் படகுகள் முன்னதாகவே ரஷ்ய உலங்குவானுர்திகளை இயந்திர துப்பாக்கிகளால் தாக்கியுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version