துணை இராணுவ குழு ஒன்றை ஆதரிக்கும் முகமாக ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு, பிரித்தானியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆராய்ந்த ஆவணங்களின்படி, இனப்படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட துணை இராணுவக் குழு ஒன்று பயன்படுத்தப்படும் இராணுவ உபகரணங்களில் பிரித்தானிய தயாரிப்புக்கள் அவதானிக்கப்பட்டதாகவும் அவை சூடானில் உள்ள போர்க்களங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ள ஒரு மோதலில், ஆயுத இலக்கு அமைப்புகள் மற்றும் கவசப் பணியாளர்கள் தரப்புக்களுக்கு பிரித்தானிய தயாரிப்பான இயந்திரங்கள் போர் களங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியா தயாரித்த பொருட்கள்
ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா தயாரித்த பொருட்களை குறித்த அமைப்புக்கு வழங்கியிருக்கலாம் என்று குற்றம் சாட்டும் தகவல்கள் ஐ.நா. பாதுகாப்பு அமைச்சுக்கு முதன்முதலில் கிடைத்த சில மாதங்களுக்குப் பிறகு, அதே வகையான இராணுவ உபகரணங்களை வளைகுடா நாட்டிற்கு மேலும் ஏற்றுமதி செய்ய பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாக புதிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் ஐ.நா. ஆயுதத் தடைகளை மீறி லிபியா மற்றும் ஏமனில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இருந்தபோதிலும், குறித்த அமைப்புக்கு இராணுவ ஆதரவு அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரகம் பலமுறை மறுத்துள்ளது.
சூடானில் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய இராணுவ உபகரணங்கள் ஜூன் 2024 மற்றும் மார்ச் 2025 திகதியிட்ட இரண்டு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும் அவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைச்சால் கண்கானிக்கப்பட்டுள்ளன.
பொதுநலவாய மேம்பாட்டு அலுவலகம்
இது தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது,
“உலகிலேயே மிகவும் வலுவான மற்றும் வெளிப்படையான ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆட்சிகளில் ஒன்றை பிரித்தானியா கொண்டுள்ளது.
அனைத்து ஏற்றுமதி உரிமங்களும் விரும்பத்தகாத இறுதி பயனருக்கு அல்லது இறுதி பயன்பாட்டிற்கு திருப்பிவிடப்படும் அபாயத்திற்காக மதிப்பிடப்படுகின்றன.
“தற்போதுள்ள ஐ.நா. தடைகள் விதிகளின் கீழ் அனைத்து நாடுகளும் தங்கள் கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என கூறியுள்ளார்.
