Home இலங்கை ஐநா ஆணையாளரின் குற்றச்சாட்டு: பதிலுக்காக விரையும் சட்டமா அதிபர் திணைக்களம்!

ஐநா ஆணையாளரின் குற்றச்சாட்டு: பதிலுக்காக விரையும் சட்டமா அதிபர் திணைக்களம்!

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்க இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நீதியமைப்பில் முக்கிய இடையூறாக சட்ட மா அதிபர் திணைக்களத்தை சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், சுயாதீனமான வழக்குத் தொடரும் அமைப்பு அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு, காவல்துறையின் வரையறுக்கப்பட்ட விசாரணை திறன், தகுதியான நுண்ணறிவு நிபுணர்கள் பற்றாக்குறை, தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லாமை போன்றவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை அடைய தடையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பரில் பதில் சமர்ப்பிப்பு

இந்த நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சுடன் ஆலோசித்து பதிலைத் தயாரித்து வருவதாக தெரியவருகிறது.

குறித்த பதில் வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள 60வது மனித உரிமைகள் கவுன்சிலில் அரசின் உத்தியோகபூர்வ விளக்கத்தின் ஒரு பகுதியாக சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

NO COMMENTS

Exit mobile version