Home உலகம் மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகள்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகள்

0

இஸ்ரேல்(israel) ஹிஸ்புல்லா இடையே மோதல்கள் அதிகரித்து கடும் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கான விமான சேவைகளை சில நாடுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளன.

கிழக்கு – மேற்கு நாடுகளின் பயண முனையமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனான்(lebanon) நாட்டிற்குச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளது.

விமானங்கள் இரத்து

அமீரகத்தின் நீண்ட பயண நேரம் கொண்ட எதிஹாத், ஃபிளைதுபை ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று எகிப்து நாட்டின் ஃபிளாக்‌ஷிப் நிறுவன விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எகிப்து தலைநகர் கைரோவிலிருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு நாள்தோறும் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

அவை இனி தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குச் செல்லும் சில விமானங்களும் ரத்து

மறு உத்தரவு வரும் வரை விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

போர் பதற்றத்தின் காரணமாக இஸ்ரேலுக்குச் செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஸ்பெயின் நாட்டின் இபிரியா, அஜர்பைஜான் உள்ளிட்ட ஏர்லைன்ஸ்களும் இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.  

NO COMMENTS

Exit mobile version