Home உலகம் கனேடிய தேர்தல் வரலாற்றில் படைக்கப்பட்ட அரிய சாதனை

கனேடிய தேர்தல் வரலாற்றில் படைக்கப்பட்ட அரிய சாதனை

0

கனேடிய (Canada) தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் மிகவும் வித்தியாசமான சாதனையொன்றை படைத்துள்ளார்.

குறித்த நபர் தேர்தலில் போட்டியிட்டு எந்த வாக்குகளையும் பெறாமல் பூச்சிய வாக்குகளை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன், அவர் கனடாவின் தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இடைத் தேர்தல்

அதன்போது, பீலிக்ஸ் அன்டனி ஹமோல் என்ற நபரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெறாமல் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் ரொறன்ரோவின் தொகுதியொன்றில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஹமோல் இவ்வாறு போட்டியிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version