Home உலகம் ஏமனில் அமெரிக்காவின் சரமாரி வான்வழி தாக்குதல்கள் !

ஏமனில் அமெரிக்காவின் சரமாரி வான்வழி தாக்குதல்கள் !

0

ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் ஏமனின் தலைநகரான சனாவில் அமெரிக்கா சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சிப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹவுதிகளின் கட்டுப்பாடு

இதன்படி வெளியாகியுள்ள தகவலில், 2014 முதல் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவின் அட்டான் பகுதி மற்றும் ஆசிர் பிராந்தியத்தில் அமைந்திருந்த சுகாதாரத் திட்டத்தையும் அமெரிக்காவின் தாக்குதல்கள் இலக்காகக் கொண்டிருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஷோப் மாவட்டத்தில் உள்ள ஃபர்வா சுற்றுப்புறம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்தை ஆகிய இடங்களிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதே ஹோடைடாவில் உள்ள ராஸ் ஈசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததுடன்  150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தநிலையில், சர்வதேச வணிகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் செங்கடல் பகுதியில் கப்பல்களுக்கு ஹவுதி குழுவினர் விடுக்கும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்காகவே இந்த இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version