Home உலகம் பயணிகளுடன் சென்ற அமெரிக்க விமானம் திடீரென மாயம்

பயணிகளுடன் சென்ற அமெரிக்க விமானம் திடீரென மாயம்

0

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்திற்கு அருகே 10 பேருடன் சென்ற விமானம் ரேடாரில் இருந்து தொடர்பிழந்து போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரிங் ஏர் 445 ரக விமானம் நேற்று (06) பிற்பகல் பெரிங் கடலுக்கு மேலே நோம் நகரத்திற்கு செல்லும் பாதையில் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தை தேடும் பணிகள் 

காணாமல் போன விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version