Home உலகம் வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

0

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25 வீதம் குறைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் வங்கி எச்சரித்துள்ளது.

அடமானக் கடன்

இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம், தனிநபர் கடன், கிரேடிட் கார்டு கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version