Home அமெரிக்கா அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜோர்ஜியாவில் காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும்.

ஜோர்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி 

அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.  

மேலும், அமைதி, சமாதானம், மனித உரிமை  உள்ளிட்ட விடயங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவராக ஜிம்மி கார்ட்டர் அடையாளப்படுத்தப்படுகின்றார். 

மேலும், தனது பதவி காலத்தில் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் அவர் முனைப்புடன் செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version